மின்னல் வேகத்தில் பாய்ந்து தலையால் முட்டி கோல்! UEFA அரையிறுதிக்கு முன்னேறிய Bayern Munich
சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதியில் ஆர்செனல் அணியை வீழ்த்திய பாயர்ன் முனிச் அரையிறுதிக்கு முன்னேறியது.
ஜேர்மனியின் Allianz Arena மைதானத்தில் நடந்த UEFA காலிறுதிப் போட்டியில் பாயர்ன் முனிச் (Bayern Munich) மற்றும் ஆர்செனல் (Arsenal) அணிகள் மோதின.
இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் முதல் பாதியில் கோல் விழவில்லை. இரண்டாம் பாதியின் 63வது நிமிடத்தில் பாயர்ன் அணிக்கு கோல் கிடைத்தது.
ரஃபேல் குர்ரேரோ அடித்த ஷாட்டை, மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த கிம்மிக் (Kimmich), தனது தலையால் முட்டி கோலாக மாற்றினார். அதன் பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க போராடினாலும் பலன் கிடைக்கவில்லை.
No sweeter sound than that of the full-time whistle ?#MiaSanMia #UCL #FCBARS pic.twitter.com/wHrYyqm9rn
— FC Bayern Munich (@FCBayernEN) April 17, 2024
இருதரப்பிலும் அடிக்கப்பட்ட கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இறுதியில் பாயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மேலும் அந்த அணி Aggregate 3-2 என முன்னிலை பெற்றதால் அரையிறுதிக்கு முன்னேறியது. ஏப்ரல் 30ஆம் திகதி அன்று நடைபெற உள்ள Leg1 அரையிறுதிப் போட்டியில், பாயர்ன் முனிச் அணி ரியல் மாட்ரிட் (Real Madrid) அணியை சந்திக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |