கோல் மழை பொழிந்த ஜேர்மன் கிளப் அணி! பயிற்சியாளருக்கே சிவப்பு அட்டை கொடுத்த நடுவர்
ஜேர்மனியில் நடந்த கால்பந்து போட்டியில் பாயெர்ன் முனிச் அணி 4-0 என்ற கோல் கணக்கில் மெய்ன்ஸ் அணியை வீழ்த்தியது.
கோல் மழை
ஜேர்மனியின் பிரபல கிளப் அணியான பாயெர்ன் முனிச் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பாயெர்னின் எரிக் மாக்ஸிம் கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து இளம் வீரரான (19) ஜமால் மியூசியாலா அசத்தலாக கோல் அடித்தார். பின்னர் 44வது நிமிடத்தில் லெரோய் சனே ஒரு கோல் அடிக்க, பாயெர்ன் அணி 3-0 என முதல் பாதியில் முன்னிலை வகித்தது.
பயிற்சியாளருக்கு சிவப்பு அட்டை
அதன் பின்னர் நடந்த இரண்டாம் பாதியின் 81வது நிமிடத்தில், யாரும் எதிர்பாராத விதமாக மெயின்ஸ் அணியின் பயிற்சியாளர் போ ஸ்வென்ஸ்சனுக்கு கள நடுவர் சிவப்பு அட்டை கொடுத்தார். அவர் உதவி நடுவருடன் வாதிட்டுக் கொண்டிருந்ததால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
அதேபோல் 86வது நிமிடத்தில் மெயின்ஸ் அணியின் அலெக்சாண்டர் ஹேக்கிற்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.
அந்த அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியாததால், பாயெர்ன் முனிச் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.