ஜேர்மனின் பாயர்ன் முனிச் வெறித்தனமான ஆட்டம்! இரண்டு கோல் அடித்து மிரட்டிய இளம் வீரர்
Bundesliga தொடரில் பாயர்ன் முனிச் அணி இந்த ஆண்டு தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
கோமன் அபாரம்
வோல்க்ஸ்வாகென் அரேனா மைதானத்தில் நடந்த போட்டியில் பாயர்ன் முனிச் மற்றும் வுல்ஃப்ஸ்பர்க் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 9வது நிமிடத்திலேயே பாயர்ன் அணி கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணியின் இளம் வீரர் கோமன் முதல் கோலை அடித்தார்.
அதன் பின்னர் அதே வேகத்தில் 14வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அவரே அடித்தார். வுல்ஃப்ஸ்பர்க் அணி சுதாரிப்பதற்குள் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் மூன்றாவது கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
@AP Photo/Michael Sohn
வுல்ஃப்ஸ்பர்க் முதல் கோல்
அதனைத் தொடர்ந்து ஒரு வழியாக 44வது நிமிடத்தில் வுல்ஃப்ஸ்பர்க் அணிக்கு காமின்ஸ்கி மூலம் கோல் கிடைத்தது. இரண்டாம் பாதியின் 54வது நிமிடத்தில் 2வது மஞ்சள் அட்டை பெற்றதால், பாயர்ன் அணி வீரர் கிம்மிக் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தாலும் ஆக்ரோஷம் குறையவில்லை. 73வது நிமிடத்தில் பாயர்னின் 19 வயது வீரர் ஜமல் முசியாலா எதிரணியின் தடுப்புகளை உடைத்து புயல்வேகத்தில் கோல் அடித்தார்.
@AP Photo/Michael Sohn
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 80வது நிமிடத்தில் வுல்ஃப்ஸ்பர்க்கின் மாட்டியாஸ் கோல் அடித்தார்.
பாயர்ன் முனிச்
முதல் வெற்றி அதன் பின்னர் வுல்ஃப்ஸ்பர்க் வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை பாயர்ன் கோல் கீப்பர் யான் சோம்மர் சிறப்பாக செயல்பட்டு தடுத்தார்.
இதனால் பாயர்ன் முனிச் அணி இந்த ஆண்டில் Bundesliga தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
@AP Photo/Michael Sohn
@JamalMusiala(Twitter)