10 கோல்கள் அடித்த கிளப்! ஃபிபா உலகக்கோப்பையில் மழையாக பொழிந்த வீரர்கள் (வீடியோ)
ஆக்லாந்து சிட்டி அணிக்கு எதிரான ஃபிபா கிளப் உலகக்கோப்பையில் பாயர்ன் முனிச் அணி 10-0 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.
பாயர்ன் முனிச் மிரட்டல்
TQL மைதானத்தில் நடந்த ஃபிபா உலகக்கோப்பை போட்டியில் பாயர்ன் முனிச் மற்றும் ஆக்லாந்து சிட்டி அணிகள் மோதின.
🌟 #MundialDeClubes 🏆🌎 #USA2025
— Santiago Ravidlas (@SantiRavidlasPy) June 15, 2025
⚽️ ¡3 GOLES en 3 MINUTOS!
✅ #Boey, #Olise, #Coman
🇩🇪 #BayernMunich 4-0 #AucklandCity 🇦🇺
🗺️ #FIFACWC
pic.twitter.com/6OQTlDO0Sq
ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் கிங்ஸ்லே கோமன் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து சச்சா போயெய் 18வது நிமிடத்திலும், மைக்கேல் ஒலிஸ் 20வது நிமிடத்திலும், கிங்ஸ்லே கோமன் 21வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் 45வது நிமிடத்தில் கோல் அடிக்க, ஓலிஸ் தனது இரண்டாவது கோலை அடித்தார்.
ருத்ர தாண்டவம்
இதன்மூலம் முதல் பாதியில் பாயர்ன் முனிச் (Bayern Munich) அணி 5-0 என முன்னிலை வகித்தது. பின்னர் தொடர்ந்த இரண்டாம் பாதியிலும் பாயர்ன் அணி வீரர்கள் ருத்ர தாண்டவம் ஆடினர்.
அவர்களின் அரணை மீறி ஆக்லாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. அதே சமயம் பாயர்ன் அணியோ மேலும் 5 கோல்கள் அடித்தது.
இளம் நட்சத்திர வீரர் ஜமால் முசியாலா (Jamal Musiala) ஹாட்ரிக் கோல் அடிக்க, பாயர்ன் முனிச் அணி 10-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |