பாயர்ன் முனிச் கோல் மழை! ஹாட்ரிக் கோல் அடித்த ஹரி கேன்..7-0 என பிரம்மாண்ட வெற்றி
பாயர்ன் முனிச் அணி 7-0 என்ற கோல் கணக்கில் VfL போச்சம் அணியை வீழ்த்தியது.
கோல் மழை பொழிந்த பாயர்ன் வீரர்கள்
பண்டஸ்லிகா தொடர் போட்டியில் VfL போச்சம் அணியை எதிர்கொண்டது பாயர்ன் முனிச். Allianz Arena மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே பாயர்ன் வீரர் எரிக் மாக்ஸிம் கோல் அடித்தார்.
Twitter (@FCBayernEN)
அதனைத் தொடர்ந்து 12வது நிமிடத்தில் ஹரி கேன் அபாரமாக கோல் அடித்தார். பின்னர் பாயர்ன் முனிச் வீரர்கள் மத்திஸ் டி லிக்ட் 29வது நிமிடத்திலும், சனே 38வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
ஹரி கேன் ஹாட்ரிக்
பாயர்ன் அணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் VfL அணி தடுமாறியது. அடுத்ததாக 54வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஹரி கேன் தனது இரண்டாவது கோலை அடித்தார்.
Twitter (@FCBayernEN)
அதனைத் தொடர்ந்து மெதிஸ் டெல் 81வது நிமிடத்தில் கோல் அடித்த நிலையில், 88வது நிமிடத்தில் ஹரி கேன் ஹாட்ரிக் கோல் அடித்தார்.
Twitter (@FCBayernEN)
இதன்மூலம் பாயர்ன் முனிச் 7-0 என்ற கோல் கணக்கில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. மேலும் புள்ளிப் பட்டியலில் 4 வெற்றிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Tradition ?
— FC Bayern Munich (@FCBayernEN) September 23, 2023
?⚪ #FCBBOC 7-0 pic.twitter.com/QYRav4nk4y
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |