ஜேர்மன் சூப்பர் கிண்ணத்தை 11வது முறையாக கைப்பற்றிய பாயெர்ன் முனிச்! தெறிக்கவிட்ட இருவர்
பாயெர்ன் முனிச் அணி 2-1 என்ற கணக்கில் விஎப்பி ஸ்டட்கர்ட் அணியை வீழ்த்தி DFL சூப்பர் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
ஹரி கேன்
ஜேர்மன் DFL சூப்பர் கிண்ணத்தின் இறுதிப்போட்டி MHP அரேனா மைதானத்தில் நடந்தது.
இதில் பாயெர்ன் முனிச் (Bayern Munich) மற்றும் VfB ஸ்டட்கர்ட் (VfB Stuttgart) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் ஹரி கேன் (Harry Kane) அபார கோல் அடித்தார். இதன்மூலம் பாயெர்ன் அணி முதல் பாதியில் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியின் 77வது நிமிடத்தில் லூயிஸ் டயஸ் (பாயெர்ன் முனிச்) கோல் அடிக்க, ஜேமி லெவெலிங் 90+3வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இறுதியில் பாயெர்ன் முனிச் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 11வது முறையாக சூப்பர் கிண்ணத்தை வென்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |