கால்பந்து வரலாற்றில் கறுப்பு தினம்! 23 உயிர்கள் பலியான துயர சம்பவம்.. 65 ஆண்டுகளுக்கு பின் நினைவுகூர்ந்த ஜேர்மன் கிளப்
65 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விமான விபத்தில், கால்பந்து வீரர்கள் உட்பட 23 பேர் பலியான சம்பவத்தை பாயர்ன் முனிச் அணி நினைவுகூர்ந்துள்ளது.
சோக சம்பவம்
கடந்த 1958 ஆண்டு பிப்ரவரி 6ஆம் திகதி, புகழ்பெற்ற கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் பஸ்பி பேப்ஸ்-யின் வீரர்கள் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது.
முனிச்-ரீம் விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், கால்பந்து வீரர்கள் உட்பட 23 பேர் பலியாகினர். இதனால் இந்த சோக சம்பவம் கால்பந்து வரலாற்றில் ஒரு கறுப்பு நாள் என்று கூறப்படுகிறது.
@Bayern Air Disaster
பாயர்ன் முனிச்
இது நடந்து 65 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த சோக சம்பவம் நட்பு மற்றும் நல்லிணக்கத்தையும் பிரதிபலிப்பதாக ஜேர்மனின் கிளப் அணியான பாயர்ன் முனிச் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த சம்பவத்திற்கு பிறகு மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பாயர்ன் முனிச் ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையே உருவான சிறப்பான பிணைப்பு இன்றுவரை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@FCBayern

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.