'அவர் என்ன ரேப்பா பண்ணார்?' சிவகார்த்திகேயனை வாய் திறக்குமாறு கூறிய பயில்வான்!
சிவகார்த்திகேயன் மீது குற்றம் சுமத்தி டி இமான் கதைத்தது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கான காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் விளக்கம் கொடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் - டி இமான்
இசையமைப்பாளர் டி இமான் அண்மையில் பேசிய ஒரு நேர்காணலில். சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிப்பது முடியாது, அவர் எனக்கு செய்த மிகப்பெரிய துரோகம் அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது.
அவர் செய்த துரோகம் எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. பல விடயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு காரணம் குழந்தைகளின் எதிர்காலம் தான் என்று கூறியிருந்தார்.
இவ்வாறு காரணம் இல்லாமல் இவர் கூறியது தற்போது இணையத்தில் ஒரு பேச்சுப்பொருளாக இருந்து வருகிறது.
இது பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகியது.
பயில்வான் ரங்கநாதன் கூறியது,
டி இமான் மோனிகா என்பவருடன் 13 வருடம் வாழ்ந்துள்ளார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், விவாகரத்து முடிந்தவுடன் இவர் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.
இவர் இரண்டாவது திருமணம் செய்யும் போது மோனிக்காவும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இவ்விடயத்தை பற்றி பேசுவது ஏன்? ஒரு வேளை மார்க்கெட் குறைந்துவிட்டதால் இப்படி பேசுகிறாரா என்று தெரியவில்லை. என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கமல் கௌதமி இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். கௌதமிக்கு கமல் பல உதவிகளை செய்தார். திடீரென்று மகளின் எதிர்காலம் கருதி கமலை பிரிந்து சென்றார் கௌதமி.
இந்த விடயத்தை அவர்கள் இருவரும் கௌரவமாக வெளியில் சொன்னார்கள். இதை பலர், பல்வேறு வகையாக பேசினார்கள். இந்த சம்பவத்தையும் டி. இமானின் சம்பவத்தையும் ஒன்றாக யோசித்து பாருங்கள் புரியும் என்றும் கூறியுள்ளார்.
இதில் சிவகார்த்திகேயன் மீது மட்டும் குற்றம் சொல்ல முடியாது. சிவகார்த்திகேயன் என்ன பாலியல் அத்துமீறலிலா ஈடுபட்டார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன் மௌனமாக இல்லாமல் ஏதாவது சொன்னால் தான் இதன் உண்மை பிரச்சனை தெரியும். அல்லது டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா முன்வந்து பேச வேண்டும் என பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |