வனிதா விஜயகுமார் 50 வயதில் திருமணம் செய்து என்ன செய்ய போகிறார்- பயில்வான் ரங்கநாதன்
வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணம் குறித்து கேட்ட கேள்விக்கு பயில்வான் ரங்கநாதன் பதிலளித்துள்ளார்.
வனிதா விஜயகுமார்
நடிகர் விஜயகுமார், மஞ்சுளா இவர்களின் மகளான வனிதா விஜயகுமார் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
இதனைத்தொடர்ந்து பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்னும் பிரபலமடைந்தார்.
முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது.
இறுதியாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அதன் பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார்.
இந்நிலையில், வனிதா தற்போது ராபர்ட் மாஸ்டருடன் ரொமாண்டிக் போஸ் கொடுத்து Save the date என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
இது Mr & Mrs எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தான் வரும் அக்டோபர் 5ஆம் திகதி வெளியிடபோகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளன.
பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது..,
இந்நிலையில், இதைபற்றி பயில்வான் ரங்கநாதனிடம் நேற்று நடைபெற்ற அப்பு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது.
அதற்கு, இந்த நிகழ்ச்சிக்கும் இந்த கேள்விக்கும் சம்மந்தம் இருக்கா எனக் கேட்க, நீங்க தான் வனிதாவோட நல்ல நண்பராயிற்றே என பத்திரிகையாளர்கள் பயில்வானை கேட்டுள்ளார்.
அதற்கு அது வெறும் படம் புரமோஷன் தான்.., 50 வயசுல கல்யாணம் பண்ணி அவரு என்ன பண்ணப் போறாரு என கிண்டலாக பதிலளிக்க அனைவரும் சிரித்து விட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |