கதறி அழுதால் கேப்டன் மீண்டும் வந்துவிடுவாரா? நடிகர்கள் சூர்யா, கார்த்தியை கடுமையாக விளாசிய பயில்வான் ரங்கநாதன்
நடிகர்கள் சூர்யா, கார்த்தி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறப்புக்கு வராமல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதை பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விளாசியுள்ளார்.
செல்போனில் வீடியோ
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 28ஆம் திகதி காலமானார். அவரது மறைவிற்கு முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய் ஆகியோர் வந்த நிலையில் அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் வராததால் விமர்சனங்களை சந்தித்தனர்.
வெளிநாட்டில் இருந்த சூர்யா செல்போனில் வீடியோ பேசி எடுத்து விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்ற சூர்யா, அவரது சகோதரர் கார்த்தி கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.
குறிப்பாக, விஜயகாந்தின் படத்திற்கு சூர்யா கற்பூரம் காட்டி தனது இரங்கலை வெளிப்படுத்தினார்.
பயில்வான் ரங்கநாதன் விளாசல்
இந்த நிலையில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோ ஒன்றில் சூர்யா மற்றும் கார்த்தியை கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது வீடியோவில், 'நடிகர் சிவகுமாரின் குடும்பம், ஊரில் எல்லோரும் தப்பாக பேசிவிடுவார்கள், நம்ம பையனின் படத்தை கேப்டனின் அபிமானிகள் பார்க்கமாட்டார்களோ என்று பயந்து நடுங்கி சமாதிக்கு வந்துள்ளனர். வழக்கமாக சமாதிக்கு வந்தால் என்ன செய்வார்கள்? கும்பிட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இவர் (சூர்யா) கற்பூரம் காட்டி மணி ஆட்டுகிறார்.
அதேபோல், நான் என் வாழ்நாளில் மிகப்பெரிய தப்பை செய்துவிட்டேன் என்கிறார் கார்த்தி. ஆனால் நாங்கள் நடிகர் சங்கத்தில் இரங்கல் கூட்டம் நடத்துவோம் என்கிறார். நடிகர்கள், நடிகைகள் அழுதா எங்களுக்கு தெரியாதா..கிளிசரீன் போடாமலேயே அழுவார், நீ வீட்டிலிருந்து வரும்போதே கிளிசரின் போட்டுட்டு வந்துட்டியா..
எதுக்கு இந்த அழுகை? நீங்கள் அழுததனால் கேப்டன் திரும்பி வந்துவிடுவாரா? சரியான ஆளாக இருந்திருந்தால் அன்றைக்கே எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, எப்படி டி.ராஜேந்தர் வந்தாரோ, எப்படி ரஜினிகாந்த் வந்தாரோ அதே மாதிரி வந்திருக்கலாம்ல.
இல்லையெனில் அஜித் மாதிரி வராமலேயே இருந்திருக்கலாம். நடிப்பை சினிமாவுடன் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அழுதாலும் நாங்கள் நம்ப மாட்டோம். நடிகராக வாழாதீர்கள், மனிதராக வாழுங்கள்! இதுதான் என்னுடைய கருத்து' என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |