நான் உன் மனைவியா? நடிகர் பயில்வான் ரங்கநாதனை கடற்கரையில் அடிக்க பாய்ந்த நடிகையால் பரபரப்பு
பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதனை நடிகை ரேகா நாயர் பொது இடத்தில் அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் சினிமா நடிகைகளின் தனிப்பட்ட விவகாரங்களை யூடியூப் சேனல்களில் பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், இரவின் நிழல் படத்தில் ஆடை இன்றி நடித்த நடிகை ரேகா நாயர் என்பவர் குறித்து வழக்கம் போல தனது பாணியில் விமர்சித்ததாகக் கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரம் அடைந்த ரேகா நாயர், பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக நடைபயிற்சி மேற்கொள்ளும் திருவான்மியூர் கடற்கரைக்கு சென்று அவரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தன்னை எப்படி அந்த மாதிரி பெண் என எப்படி விமர்சிக்கலாம் என்று கேட்க, ஆடையில்லாமல் நடிப்பது சரியா என்று பதிலுக்கு பயில்வான் எகிற, நான் என்ன உங்க மனைவியா அல்லது மகளா? நான் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்று ரேகா நாயர் எகிற பயில்வான் பம்மினார்.
அதோடு அவரை அடிப்பது போல நடிகை ஆவேசமாக கைவீச பயில்வான் தடுத்ததால் அறைவிழுவதில் இருந்து தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பயில்வான் ரங்கநாதன், இரவின் நிழல் படத்திற்கான விளம்பர யுக்திக்காக பார்த்திபன் அனுப்பி இருப்பதாகத் தெரிவித்தார். சினிமாவில் இப்படி ஆபாசமாக நடிப்பது ஏன் ? என்று கேட்டதற்கு அந்த நடிகை தன்னை மறித்து மோசமாக வாக்குவாதம் செய்ததாகவும், தன்னை அவர் தாக்கி இருந்தால் அவர் மீது விழுந்து கடித்து இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.