Bigg Boss 8: அதிரடியாக நடந்த இரட்டை எவிக்சன்.. வெளியேறிய 2 போட்டியாளர்கள் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசனாக சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன்.
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை வீட்டில் இருந்து ரவீந்தர், தர்ஷா, அர்னவ், சுனிதா, ரியா, வர்ஷினி, சிவகுமார் என அடுத்தடுத்து குறைவான வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து வெளியேறினர்.
பொம்மை டாஸ்க், டெவில் Vs ஏஞ்சல் என்று சேலஞ்சிங்கான டாஸ்க் கொடுக்கப்பட்ட போதிலும் அதனை எவ்வளவு சுவாரஸ்யம் குறைவாக விளையாடி ரசிகர்களை கடுப்பேற்றினர்.
நேற்று நடந்த வீக் எண்ட் எபிசோடில் விஜய் சேதுபதி டாஸ்கை உருப்படியாக செய்யவில்லை என பலபேரை கோபத்துடன் வறுத்தெடுத்தார் விஜய் சேதுபதி.
இன்று ஞாயிற்றுக் கிழமை வீட்டை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்த வாரம் வீட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வெளியான தகவலின் படி, பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சாச்சனா மற்றும் ஆர்ஜே ஆனந்தி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சாச்சனா, குறைவான வாக்குகளை பெற்றிருப்பதால், இந்த நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
அதே போல ஆர்.ஜே.ஆனந்தியும் குறைவான வாக்குகளை பெற்றதால் இன்றைய எபிசோடில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
சாச்சனா ஒரு நாளைக்கு ரூ.20,000 வரை சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கு ரூ.12 லட்சத்திற்கு மேல் மொத்தமாக சம்பளம் வழங்கப்பட்டிருக்கலாம்.
அதேபோல ஆனந்தியும், ஒரு நாளைக்கு ரூ.25,000 வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. இவருக்கு மொத்தமாக ரூ.15 லட்சம் வரை கொடுக்கப்பட்டிருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |