பிக்பாஸ் வீட்டிலுள்ள 2 போட்டியாளர்களை வெளியனுப்ப மீண்டும் உள்ளே வரும் EX போட்டியாளர்கள்
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
24 போட்டியாளர்களுடன் ஆரவாரமாக தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்களுடன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில் தற்போது பவித்ரா, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், செளந்தர்யா ஆகிய 8 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
இதில் கடந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் ரயான் வெற்றி பெற்றதால், இந்த சீசனில் முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்துள்ளார் ரயான்.
இவருக்கு அடுத்ததாக பைனலிஸ்ட்டாக மாற உள்ள போட்டியாளர் யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக புதிய தகவலை அறிவித்துள்ளார் பிக்பாஸ்.
இதுகுறித்து பிக்பாஸ் கூறி உள்ளதாவது, "உங்களுக்காக, வைல்ட் கார்ட் நாக் அவுட் சுற்று. எக்ஸ் கண்டெஸ்டண்ட்ஸ் உங்களுடன் போட்டி போட சக போட்டியாளராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர உள்ளனர்.
இந்த போட்டியின் முடிவில் இரண்டு பேர் எக்ஸ் கண்டஸ்டென்சால் ரிப்ளை செய்ய படலாம். யார் யாரை நாக் அவுட் செய்யப் போகிறார்கள் பார்ப்போம்" என உள்ளது.
இதை கேட்டு சௌந்தர்யா ஐயோ என ஷாக் ரியாக்ஷன் கொடுக்க, ஜாக்குலின் என்னடா முதலில் இருந்தா என சலித்துக் கொண்டு பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து பேசும் முத்து, இருக்கும் மீதி 14 நாட்களில் நம்மால் முடிந்தவரை முழுவதையும் போட்டு விட்டோம் என்கிற நிம்மதியோடு வெளியே போக நல்ல வாய்ப்பு. இறங்கி என்ன முடியுமோ செய்யணும் என கூறுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |