Bigg Boss 9: இந்த வாரம் வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.., யார் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
கடந்த 8ஆவது சீசன் முதல் புதிய தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கி சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கிவருகிறார்.
பிக்பாஸில் கடந்த வாரம் நடைபெற்ற வழக்காடு மன்றம் டாஸ்க்கில் பலரும் புகார் தெரிவித்து அதற்கு நீதி பெற போராடினர்கள்.

இந்நிகழ்ச்சியில் பார்வதியும் கம்ருதின் இருவரும் வீட்டிற்குள் செய்யும் பல விடயங்கள், வெளியில் எதிர்மறையாக மாறியிருக்கின்றன.
பார்வதி மற்றும் கம்ருதின் செய்த செல்யல்களை விஜய் சேதுபதி இன்று தட்டி கேட்கும் புரோமோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில், 60 நாட்களை கடந்து நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த வாரத்தில் போட்டியாளர் ரம்யா ஜோ முதல் ஆளாக வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.
ரம்யா ஜோ கடந்த வாரம் தொகுப்பாரளர் விஜய் சேதுபதி பேசுகையில் அவரிடத்தில் வாதம் செய்து வெளியே செல்வதாக கூறி பின் செல்லவில்லை.
ரம்யா ஜோவை தொடர்ந்து, வைல்ட் கார்ட் மூலம் நுழைந்த போட்டியாளர் சாண்ட்ரா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |