Bigg Boss பிரபலம் பிரதீப் ஆண்டனியின் திருமணம்.., மணப்பெண் யார் தெரியுமா?
தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலம் பிரபலமானவர், பிரதீப் ஆண்டனி.
இவர், கடந்த ஆண்டு தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் முக்கிய போட்டியாளராக உள்நுழைந்தார்.
இதையடுத்து, பிக்பாஸிற்குள் போன இவர், முதல் நாளில் இருந்து அனைவரையும் காலி செய்து விளையாட ஆரம்பித்தார்.
சிறப்பாக விளையாடிய இவர் முதல் முறையாக ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
சக பெண் போட்டியாளர்களிடம் முறையாக நடந்து கொள்வதில்லை என்றும், பிறரை தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் சக போட்டியாளர்கள் குற்றம் சாட்டி பிக்பாஸ் இல்லத்தில் இருந்த ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன், அவருக்கு மக்களின் ஆதரவு பெரிதளவில் பெருகியது.
இந்நிலையில், பிரதீப் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தனது சமூக வலைளதங்களில் அறிவித்தார்.
பிரதீப் ஆண்டனி, பிக்பாஸிற்கு போவதற்கு முன்னர் இருந்தே பூஜா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களுக்கு சமீபத்தில் ஒரு தேவாலயத்தில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |