சென்னையில் புதிய வீட்டிற்கு குடியேறிய பிக்பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன்
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமான முத்துக்குமரன் தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு இறுதி வரை பல்வேறு சவால்களை சந்தித்து டைட்டிலை வென்றார்.
பிக்பாஸ் 8 சீசனில் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் புதிதாக சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு குடியேறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் ரூபாய் பணப்பெட்டியை முதல் ஆளாக ஓடிச் சென்று எடுத்து அசத்தினார்.
இந்த சீசனில் அவருக்கு வெற்றி கோப்பையுடன் 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் சென்னையில் தனது நண்பர்களுடன் சாதாரண வீட்டில் வசித்து வந்த நிலையில், தற்போது அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிப்பெயர்ந்துள்ளார்.
சென்னையில் உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் புது வீட்டுக்கு குடிபுகுந்து அம்மாவுடன் இணைந்து பால் காய்ச்சும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் முத்துக்குமரன், மக்களே இது வெறும் வாடகை வீடு தான் என கூறியுள்ளார்.
40 லட்சம் ரூபாய்க்கு எல்லாம் சென்னையில் புது வீடு வாங்குவது என்பது நடக்காத ஒன்று என்பதால் இன்னமும் அதிகம் உழைப்பதற்காக கொஞ்சம் வசதியான வாடகை வீட்டுக்கு வந்திருக்கிறார் முத்துக்குமரன்.
பிக்பாஸ் முத்துக்குமரனின் வாடகை வீட்டை பார்த்த ரசிகர்கள் சீக்கிரமே சொந்த வீடு வாங்க வாழ்த்து தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |