எதிர்பாராத போட்டியாளரை வெளியேற்றிய பிக்பாஸ்.., கண்ணீரோடு வெளியேறியது யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் 23 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் 12 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்துவிடும்.
இந்நிலையில், அடுத்த வாரத்திற்கான தலைவர் போட்டியில் முத்துக்குமரன் பவித்ராவிற்கு விட்டுக்கொடுத்து விளையாடினார்.
இதனால் தலைவர் போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது,. மேலும், Nomination free pass போட்டியும் இனி நடக்காது என பிக்பாஸ் எச்சரித்துள்ளார்.
வீட்டில் உள்ள அனைத்துப் போட்டியாளர்களுக்கும் தன்னால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என முத்துக்குமரன் கதறி அழுதார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி 76 நாட்களை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் அன்ஷிதா தான் கடைசி இடத்தில் இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத போட்டியாளரான ரஞ்சித் இந்த வாரம் வெளியேறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் பெரிதாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தாமல் அமைதியாகவே விளையாடி வந்த ரஞ்சித், போட்டியாளர்கள் அனைவருடனும் ஒரு உறவினர் போல் பழகினார்.
எனவே இவரின் வெளியேற்றத்தை கண்ணீருடன் தான் மற்ற போட்டியாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |