பிக்பாஸில் Ticket to finale வென்ற போட்டியாளர்.. முதல் பைனலிஸ்ட் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 88 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இன்னும் இரண்டு வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவடைய உள்ள நிலையில் இதில் தற்போது ரயான், ராணவ், முத்துக்குமரன், அருண், விஷால், தீபக், பவித்ரா, மஞ்சரி, செளந்தர்யா, ஜாக்குலின் ஆகிய 10 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர்.
நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் நெருங்க நெருங்க போட்டியும் கடுமையாகி வருகிறது. இதில் மிக முக்கியமான டாஸ்க்கு தான் Ticket to finale.
இந்த வாரம் முழுக்க நடந்த Ticket to finale டாஸ்கில் மொத்தம் 10 போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில் யார் அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்களோ அந்த போட்டியாளர் நேரடியாக பைனலுக்குள் செல்லும் வாய்ப்பை பெறுவார்.
மொத்தம் 5 நாட்கள் இந்த Ticket to finale டாஸ்க் நடத்தப்பட்ட நிலையில், இந்த டாஸ்குகளின் முடிவில் ரயான் 21 புள்ளிகளுடன் வெற்றிபெற்று இருக்கிறார்.
இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் முத்துக்குமரன் உள்ளார். அவருக்கு 19 புள்ளிகள் கிடைத்திருந்தன.
இந்நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 8ல் முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்திருக்கிறார் ரயான்.
ஒருவேளை இந்த வாரம் நடைபெறும் எவிக்ஷனில் ரயான் எலிமினேட் ஆனால் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள முத்துக்குமரனுக்கு Ticket to finale கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |