திருமணத்தை அறிவித்த பிக்பாஸ் ஜோடி விஷ்ணு- சௌந்தர்யா.., எப்போது தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 90 நாள்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் போட்டியாளர்களின் உறவினர்கள், நண்பர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சர்ப்ரைஸ் செய்தனர்.
அப்படி, சௌந்தர்யாவை பார்க்க, சர்ப்ரைஸாக அவரின் நண்பரும் சின்னத்திரை நடிகரும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான விஷ்ணு விஜய் வந்திருந்தார்.
அப்போது சௌந்தர்யா விஷ்ணு விஜய்க்கு "Will You Marry Me" என்று கூறி கல்யாணம் செய்துகொள்ளுமாறு தனது காதலை வெளிப்படுத்தினார்.
விஷ்ணு விஜய், "நான் உன்னை சர்ப்ரைஸ் செய்யலாம் என வந்தால், நீ என்னை சர்ப்ரைஸ் செய்கிறாய்" என்று கூறி அவரின் காதலை ஏற்றுக்கொண்டார்.
சௌந்தர்யா மற்றும் விஷ்ணு விஜய் இருவரும் நீண்ட நாட்களாகவே நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில் விஷ்ணு விஜய்க்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே சௌந்தர்யா காதலை வெளிப்படுத்தியது கவனம் ஈர்த்தது.
இதற்கிடையே, சௌந்தர்யாவின் லவ் ப்ரொபோஸ் குறித்து விஷ்ணு விஜய் தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், உண்மையாகவே இருவரும் காதலிப்பதாகவும், சில காலம் காதலர்களாக சுற்றிவிட்டு பின்னர் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் விஷ்ணு அறிவித்துள்ளார்.
முடிந்தவரை, இந்த வருடம் கடைசிக்குள் திருமணம் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிக்பாஸ் டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும், பிக்பாஸ் மூலமாக அழகான வாழ்க்கை கிடைத்துள்ளதாக விஷ்ணு விஜய் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |