பிக்பாஸில் டைட்டில் ஜெயிச்சா கூட இவ்வளவு கிடைக்காது.., ரஞ்சித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
கடந்த இரு வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் டபுள் எவிக்ஷன் இருந்த நிலையில் இந்த வாரம் ஒரே ஒரு நபரை எலிமினேட் செய்துள்ளார் பிக்பாஸ்.
பிக்பாஸ் வீட்டில் சண்டையே போடாமல், அமைதியாக விளையாடி வந்த ரஞ்சித் குறைவான வாக்குகள் பெற்று இந்த வாரம் எலிமினேட் ஆனார்.
இந்த சீசனில் அனைவருடனும் பாசமாக இருந்த போட்டியாளரான ரஞ்சித் வெளியேறியதால் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ரஞ்சித் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளரான ரஞ்சித்திற்கு ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது.
இவர் மொத்தமாக இருந்த 77 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 38 லட்சத்து 50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் டைட்டில் ஜெயிப்பவருக்கு கூட இவ்வளவு தொகை கிடைக்காது என்பது தான் இதில் முக்கியமான விடயம்.
பிக்பாஸ் டைட்டில் ஜெயித்தால் 50 லட்சம் பரித்தொகை வழங்கப்படும், ஆனால் அதில் வரி போக அவர்களுக்கு 30 லட்சம் தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |