பிக்பாஸில் கடந்த வாரம் வெளியேறிய சத்யா, தர்ஷிகாவின் சம்பளம்.., எத்தனை லட்சங்கள் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசனாக சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன்.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் 9ஆவது வாரத்தில் டபுள் எவிக்ஷன் என அறிவித்தார் விஜய் சேதுபதி.
முதலில் RJ ஆனந்தியை எலிமினேட் செய்த விஜய் சேதுபதி. அவரை தொடர்ந்து சாச்சனாவும் எலிமினேஷன் ஆனார்.
அதற்கடுத்து பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் இருந்த நிலையில், ஆட்கள் அதிகமாக இருப்பதால் இனி வார வாரம் டபுள் எவிக்ஷன் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில், அதில் சத்யாவும் தர்ஷிகாவும் எவிக்ட் செய்யப்பட்டனர்.
அதன்படி நடிகர் சத்யா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அண்ணா தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
இவருக்கு பிக்பாஸில் ஒரு எபிசோடுக்கு ரூ.20,000 சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது அவர் 69 நாட்கள் வரை பிக்பாஸ் இல்லத்தில் இருந்ததால் இவருக்கு சுமார் 13 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அதேபோல, சீரியல் நடிகை தர்ஷிகாவிற்கும் பிக்பாஸில் ரூ.20,000 முதல் 25,000 வரை சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இவரும், இந்த வீட்டில் சுமார் 70 நாட்கள் வரை இருந்திருக்கிறார். இதனால் இவருக்கு சுமார் 14 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |