நேரலையில் செய்த தவறுக்கு சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்ட தொகுப்பாளினி

London
By Ragavan Dec 08, 2023 07:58 AM GMT
Report

நேரலை செய்தி ஒளிபரப்பின் போது நடுவிரலைக் காட்டிய தொகுப்பாளினி தனது தவறுக்காக சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தொலைக்காட்சிகளில் நேரலை ஒளிப்பரப்பின்போது செய்தி வாசிப்பாளர்கள் விழிப்புடன் இல்லாதபோது சில தவறுகள் நடக்கின்றன. ஆனால் நேரலையில் சிறிய தவறுகள் கூட எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

புதிய சிம் கார்டு விதிகள் இன்று முதல் அமுல்., மீறினால் ரூ.10 லட்சம் அபராதம்!

புதிய சிம் கார்டு விதிகள் இன்று முதல் அமுல்., மீறினால் ரூ.10 லட்சம் அபராதம்!

சமீபத்தில், BBC News தொகுப்பாளினி ஒருவர் தனது நடுவிரலைக் காட்டும் காட்சி நேரலையில் ஒளிபரப்பானது. இதனால், அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

தலைமை தொகுப்பாளர் மரியம் மோஷிரி மதியம் செய்திக்கு தயாராகி கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் தனது நடுவிரலைக் காட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

BBC chief presenter Maryam Moshiri, Maryam Moshiri Viral Video, Maryam Moshiri apologised for showing middle finger live telecast, நேரலையில் செய்த தவறுக்கு சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்ட தொகுப்பாளினிBBC Screenshot

நேரலைக்கான கவுண்ட்டவுன் தொடங்கி பூஜ்ஜியத்தை எட்டியபோது மோஷிரி திரையில் நடுவிரலைக் காட்டியுள்ளார். நேரலை தொடங்கிவிட்டது என்பது தெரிந்த மறுநொடி, உடனே சுதாரித்துக்கொண்டு 'லலைவ் ஃப்ரம் லண்டன்... பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ், கொரோனா காலத்தில் இங்கிலாந்துக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கும், இழப்புகளுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்' என்ற செய்தியை படிக்க ஆரம்பித்தார்.

கிறிஸ் ரோஸ் என்ற ட்விட்டர் பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அது வைரலானது. பலர் அவரது தொழில்முறை பற்றி கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், X தளத்தில் இந்த வீடியோ குறித்து மோஷிரி விளக்கம் அளித்து, மன்னிப்பும் கேட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் Tesla கார் தொழிற்சாலை? எலான் மஸ்க் இந்தியாவில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு

தமிழ்நாட்டில் Tesla கார் தொழிற்சாலை? எலான் மஸ்க் இந்தியாவில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு

அவரது பதிவில், 'அனைவருக்கும் வணக்கம்.. டைரக்டர் 10லிருந்து கவுண்ட்டவுன் ஆரம்பித்ததும் விரல்களால் எண்ணைக் காட்டினேன். நான் நம்பர் 1 வந்ததும் நகைச்சுவைக்காக விரலை காட்டினேன்.. அது கமெராவில் சிக்கிவிடும் என்று நினைக்கவில்லை. இது தனது குழுவுடன் நகைச்சுவைக்காக செய்தது.. ஆனால், அது ஒளிபரப்பானதற்கு மன்னிக்கவும். இது வேண்டுமென்றே செய்யப்படவில்லை.. இது யாரையாவது பாதிக்கச் செய்திருந்தாலோ அல்லது புண்படுத்தியிருந்தாலோ மன்னிக்கவும்..' என மோஷிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொகுப்பாளர்கள் கவனமாக இல்லாவிட்டால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   

BBC chief presenter Maryam Moshiri, Maryam Moshiri Viral Video, Maryam Moshiri apologised for showing middle finger live telecast

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US