பிபிசியின் தலைவராக இந்திய வம்சாவளியினர் தேர்வு: சில தகவல்கள்
பிபிசியின் தலைவராக இந்திய வம்சாவளியினர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரைக் குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.
பிபிசியின் தலைவராக இந்திய வம்சாவளியினர் தேர்வு
இந்தியாவின் ஔரங்கபாத்தில் பிறந்தவரான Dr சமீர் ஷா (Shah (Dr Samir Shah, 71) என்பவரை பிபிசியின் தலைவராக பிரித்தானிய அரசாங்கம் தேர்வு செய்துள்ளது.
ஷா, 1960ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளார். தொலைக்காட்சித் தயாரிப்பு மற்றும் ஊடகத்துறையில் 40 வருட அனுபவம் கொண்ட ஷா, இதற்கு முன் பிபிசியின் அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் பிரிவின் தலைவராக பணியாற்றியவர் ஆவார்.
Image Source : UK GOV/AP
இதற்கு முன், ரிச்சர்ட் ஷார்ப் என்பவர் பிபிசியின் தலைவராக பொறுப்பு வகித்துவந்த நிலையில், அவர் பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஒரு மில்லியன் டாலரை கடனை வழங்குவதற்கு உதவியாக செயல்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் பதவி விலகினார். அவருக்கு பதிலாக தற்போது ஷா அந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஷா, 2019ஆம் ஆண்டு, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கையால் தொலைக்காட்சித் துறையில் சிறப்புற பணியாற்றியதற்காக CBE (Commander of the Most Excellent Order of the British Empire) என்னும் கௌரவத்தைப் பெற்றவர் ஆவார்.
ஷாவுக்கு, பிபிசியின் தலைவர் பொறுப்புக்காக வழங்கப்பட இருக்கும் ஊதியம், 160,000 பவுண்டுகள்...
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |