சிறுவனின் ஆபாச படத்திற்காக பல லட்சம் செலவிட்ட பிரபல நபர் இவர்தான்: மனைவியே அம்பலப்படுத்திய பெயர்
பிரித்தானியாவில் சிறுவன் ஒருவருக்கு பல லட்சங்கள் செலவிட்டு ஆபாச படங்கள் பெற்றுக்கொண்ட பிரபல ஊடகவியலாளரின் பெயர் அம்பலமாகியுள்ளது.
மனைவியே அம்பலப்படுத்தியுள்ளார்
BBC நிறுவனத்தில் பணியாற்றும் 10 மணி செய்தி வாசிப்பாளரான Huw Edwards என்பவரே அந்த நபர் என அவரது மனைவியே தற்போது அம்பலப்படுத்தியுள்ளார்.
Photograph: BBC
இவரே சிறுவன் ஒருவனிடம் சுமார் 35,000 பவுண்டுகள் தொகை செலவிட்டு, நிர்வாணப் படங்களை பெற்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் முதன்முறையாக அறிக்கை வெளியிட்டுள்ள Vicky Flind, தமது கணவர் சார்பாக இந்த அறிக்கையை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 5 நாட்களாக அனுபவித்த நரக வலி போதும் என்ற கட்டத்தில் தான், இப்படியான ஒரு அறிக்கையை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். மேலும், முதன்மையாக அவரது மன நலனில் அக்கறை கொண்டும், எங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகவும் இதை செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மன அழுத்தத்திற்கு சிகிச்சை
மட்டுமின்றி, ஹூ கடுமையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வியாழக்கிழமை தான் இப்படியான ஒரு குற்றச்சாட்டு தன் மீது வைக்கப்படுவதாக தம்மிடம் ஹூ குறிப்பிட்டதாக Vicky Flind தெரிவித்துள்ளார்.
Photograph: BBC
மேலும், இந்த குற்றச்சாட்டில் சிக்கி பலர் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள Vicky Flind, இந்த அறிக்கையின் ஊடாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையான 61 வயது Huw Edwards மீது கடந்த மே மாதம் புகார் அளிக்கப்பட்டது. புதன்கிழமை லண்டன் மாநகர பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதாக உறுதி செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |