ஒரே நேரத்தில் கோலி, கே.எல் ராகுல், ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படுமா? வெளியான முக்கிய தகவல்
முதல் மூன்று முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரே தொடருக்கு ஓய்வு அளிக்க வாய்ப்பில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய அணி இம்மாத இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த அணியில் விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ தெரிவிக்கையில், இந்திய அணியின் பணிச்சுமை பற்றியும் உலகக்கோப்பை டி20-யில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியதற்கும் பயோபபுள் களைப்பு, மூளை இழப்பு, களைப்பு ஆகியவை காரணங்களாகக் கூறப்பட்டன.
இதனைக் கருத்தில் கொண்டு கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் உடல்தகுதி விவரங்களை பயிற்சியாளர் ராகுல் திராவிட் சமர்ப்பிப்பார். தொலைக்காட்சி ஒளிபரப்பாளரைக் கருத்தில் கொள்ள வேண்டும், இரண்டாவது அணியை ஒருபோதும் களமிறக்க முடியாது.
டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவின் முதல் மூன்று முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரே தொடருக்கு ஓய்வு அளிக்க வாய்ப்பில்லை.
இந்த மூன்று வீரர்களும் கடந்த ஜூன் மாதம் முதல் இந்திய அணியில் இருந்து விளையாடி வருகின்றனர். குறிப்பாக ரோகித் சர்மா, கோலி, பும்ரா மற்றும் ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள், இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் போதும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஐபிஎல் தொடரின் போதும் அதிரடியாக விளையாடி இருக்கின்றனர் என தெரிவித்துள்ளது.