விராட் கோலியின் 100வது டெஸ்டில் திடீர் மாற்றம் - அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100வது டெஸ்ட் விஷயத்தில் பிசிசிஐ முக்கிய முடிவு எடுத்துள்ளது.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 4ஆம் தேதி மொஹாலியில் தொடங்க உள்ளது. இப்போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என பிசிசிஐ முன்னதாக அறிவித்திருந்தது.
ஆனால் இது விராட் கோலிக்கு எதிரான சதிச் செயல் என ரசிகர்கள் விமர்சித்திருந்தனர். அதேசமயம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கரும், 100வது டெஸ்ட் என்பது மிகவும் முக்கியமான தருணம். இதற்கு ரசிகர்களை அனுமதித்து, அதனை பெரிதளவில் கொண்டாட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து இலங்கை தொடருக்கு ஏற்கனவே போதிய வரவேற்பு ரசிகர்களிடம் இல்லை என்பதால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பார்வையாளர்களை அனுமதித்து விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியை விளம்பரத்த பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் இதனை பரிசீலினை செய்த பிசிசிஐ 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது என்று முடிவு எடுத்துள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் கிளப், ஸ்பான்சர்களுக்கு மட்டும் குறைந்தளவில் டிக்கெட் வழங்கப்படலாம் என்ற செய்தியும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி தவித்து வருகின்றனர்.