வெளியானது 2022 ஐபிஎல் அட்டவணை! முதல் போட்டியில் தோனி-ஸ்ரேயாஸ் ஐயர் மோதல்
2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் மார்ச் 22ம் திகதி மும்மை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.
மொத்தம் 10 அணிகள் விளையாட இருக்கும் 2022 ஐபிஎல் தொடரில் பிற்பகல் போட்டிகள் 3.30 மணிக்கும் இரவு நடைபெறும் போட்டிகள் 7.30 மணிக்கும் தொடங்கும்.
மும்பை வான்கடே மைதானம், புனே எம்சிஏ மைதானம், மும்பையில் உள்ள DY Patil மைதானம் மற்றும் மும்மையில் உள்ள பிராபோர்ன் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.
65 நாட்கள் நடைபெறும் 15வது ஐபிஎல் சீசனில், மொத்தம் 70 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளேஆஃப் ஆட்டங்கள் விளையாடப்படும்.
பிளேஆஃப் மற்றும் மே 29 அன்று நடைபெறும் 2022 ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
IPL 2022 complete schedule. pic.twitter.com/1JIst5pzWC
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 6, 2022