பொய் சொன்ன கோலி! உண்மையை வெளிச்சமாக போட்டுடைத்த தேர்வு குழு தலைவர்
இந்திய அணியின் தேர்வு குழு தலைவரான சேத்தன் சர்மா, தற்போது கூறியுள்ள விஷயம் கோலி பொய் சொல்லியுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு(2021) அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடருக்கு பின், கோலி கேப்டன் பதவியை விட்டு விலகிய நிலையில், அவருடைய ஒருநாள் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது.
ஏனெனில், ஒருநாள் மற்றும் டி20-க்கு வெவ்வேறு கேப்டன்கள் இருந்தால், அது நன்றாக இருக்காது என்பதால், கோலியின் ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதாக கங்குலி தெரிவித்திருந்தார். டி20 கேப்டன் பதவியில் இருந்து கோலியை விலக வேண்டாம் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டதாக கூறியிருந்தார்.
ஆனால், கோலியோ தன்னிடம் யாரும் அப்படி கேட்கவில்லை என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா, கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டாம் என்று பிசிசிஐ தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
அவரிடம் டி20-யில் இருந்தி விலகினால் ஒருநாள் போட்டிக்கும் மாற நேரிடும் என்று கூறினோம். ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால், கோலி தன்னிடம் பிசிசிஐ கேட்கவில்லை என்று பொய் சொல்லியுரா என்ற கேள்வி எழுந்துள்ளது.