ஆபரேஷன் சிந்தூரை வைத்து சீண்டிய பாகிஸ்தான் வீரர்கள் - புகார் அளித்துள்ள பிசிசிஐ
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் வைத்து சைகை காட்டிய பாகிஸ்தான் வீரர்கள் மீது பிசிசிஐ ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் மோதல்
2025 ஆசிய கோப்பையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
லீக் போட்டியில், இரு அணிகளும் விளையாடிய போது நாணய சுழற்சியின் போது அணித்தலைவர்கள் மற்றும் போட்டி முடிந்த பின்னர் வீரர்கள் கை குலுக்காத விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போட்டி நடுவரை மாற்ற வேண்டும் இல்லையெனில் தொடரில் இருந்து விலகுவோம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி யிடம் முறையிட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அந்த போட்டிக்கு பின்னர், இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் அளித்த நேர்காணல், அரசியல் ரீதியான பேச்சு எனக்கூறி தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சியிடம் புகார் அளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது சூர்யகுமார் யாதவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை வைத்து சீண்டிய பாகிஸ்தான்
இதனையடுத்த சூப்பர் 4 போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ரசிகர்களை சீண்டும் வகையில், மைதானத்தில் சர்ச்சைக்குரிய சைகைகளை வெளிப்படுத்தினர்.
Haris Rauf never disappoints, specially with 6-0. pic.twitter.com/vsfKKt1SPZ
— Ihtisham Ul Haq (@iihtishamm) September 21, 2025
பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூப், பீல்டிங் செய்யும் போது இந்திய ரசிகர்களை 6-0 என்ற சைகையையும், கையை விமானம் பறப்பது போல் காட்டியும் உடனே அதனை சுட்டு வீழ்த்தியது போலவும் சைகை காட்டினார்.
அதாவது, ஆபரேஷன் சிந்தூரின் போது 6 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறி வரும் நிலையில், அதை வைத்து ரசிகர்களை சீண்டியுள்ளார்.
1 more Rafale shot down #PAKvIND #AsiaCup2025 #PAKvsIND pic.twitter.com/CIEBDAcNuA
— Muhammad Aqib (@iamaqib1068) September 21, 2025
அதே போல், அரை சதமடித்த பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான் பேட்டை துப்பாக்கி சுடுவது போல் பிடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
பஹல்காம் தாக்குதலில், 26 இந்திய சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை குறிப்பிட்டு இவ்வாறு சைகை காட்டுவதாக இந்திய ரசிகர்கள் கொந்தளித்தனர்.
இந்த 2 வீரர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதாரங்களுடன் ஐசிசியிடம் அதிகாரபூர்வமான புகாரை பிசிசிஐ அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |