இனி இதெல்லாம் பார்க்க கூடாது! கோஹ்லி மற்றும் ரவிசாஸ்திரிக்கு பிசிசிஐ போட்ட கண்டிஷன்: வெளியான முக்கிய தகவல்
இந்திய அணியின் கேப்டன் ஆன கோஹ்லி மற்றும் ரவிசாஸ்திரிக்கு பிசிசிஐ சில கண்டிஷன்களை போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பின் இந்திய அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக அடுத்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.
இதற்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன் படி பிசிசிஐ நடத்திய வீடியோ கான்பிரன்ஸ் கூட்டத்தில், சீனியர் வீரராக இருந்தாலும் சரி, ஜூனியர் எதிராக இருந்தாலும் சரி யார் நல்ல பார்மில் இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். மற்ற வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
போட்டி துவங்கும் முன்னரே அணி தயாராக இருக்க வேண்டும் என்றும் கடைசி நேரத்தில் மைதானம் வானிலை மற்றும் போட்டி அறிக்கை ஆகியவற்றை கணக்கில் கொண்டு 11 வீரர்களை இந்திய அணி வெற்றி பெறும் நோக்கில் தேர்வு செய்யப்பட வேண்டுமெனவும் பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்த கூட்டத்தின் போது, கோஹ்லி மற்றும் ரவிசாஸ்திரியிடம் பிசிசிஐ சற்று காட்டமாகவே நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.