தவறான தகவலை யாரும் பரப்பாதீங்க.., விராட் கோலி விலகல் குறித்து BCCI விளக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விராட் கோலி விலகியுள்ள நிலையில் BCCI விளக்கம் அளித்துள்ளது.
போட்டியில் இருந்து விலகிய விராட் கோலி
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2 -வது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதனால், இரு அணிகளும் 1-1 என சமனில் உள்ளது.
3 -வது டெஸ்ட் போட்டி வரும் 15 -ம் திகதி ராஜ்கோட்டில் தொடங்க உள்ளது. இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் 2 போட்டிகளில் இருந்து விலகிய கோலி மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.
விராட் கோலி விலகல் குறித்து ரசிகர்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், BCCI அவரது விலகல் குறித்து விளக்கமளித்துள்ளது.
BCCI விளக்கம்
BCCI வெளியிட்ட தகவலில், "விராட் கோலி அவரது தனிப்பட்ட முடிவை எங்களிடம் முறைப்படி தெரிவித்துவிட்டே விடுப்பை எடுத்துள்ளார். அவரது பிரைவசியை நாங்கள் மதிக்கிறோம்.
நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது ஒரே விடயம் தான். அவரை பற்றி வதந்திகளையும், வியூகங்களையும் பரப்ப வேண்டாம். அவரது முடிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது முக்கியமான ஒன்று. தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |