வலியுடன் விளையாடிய ரிஷப் பன்ட் - புது விதியை அறிமுகப்படுத்திய BCCI
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2025-26 உள்நாட்டு சீசனுக்கான புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது Serious Injury Replacement எனப்படும் விதியாகும்.
இந்த விதி Multi-day tournament போட்டிகளுக்கு மட்டும் பொருந்தும். T20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு பொருந்தாது.
இந்த மாற்றம், ரிஷப் பன்ட், கிறிஸ் வோக்ஸ் போன்ற வீரர்கள் கடுமையான காயத்துடன் விளையாடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து வந்துள்ளது.
இந்த புதிய விதியின் கீழ், ஒரு வீரர் போட்டியின்போது மைதானத்தில் கடுமையான காயம் அடைந்தால், அவருக்கு பதிலாக ஒரே மாதிரியான மாற்று வீரரை களத்தில் அனுமதிக்கப்படலாம்.
Serious Injury Replacement விதியின் முக்கிய அம்சங்கள்
- காயம் போட்டி மைதானத்தில் நேரிட வேண்டும்
- Fracture, Dislocation, DeepCut போன்ற வெளிப்படையான காயமாக இருக்கவேண்டும்
- மாற்று வீரர் போட்டிக்கு முன் அறிவிக்கப்பட்ட மாற்று வீரர் பட்டியலில் இருக்க வேண்டும்
- விக்கெட் கீப்பர் காயம்பட்டால், அவசர தேவைக்கு வெளியிலிருந்து மாற்று வீரரை அனுமதிக்கலாம்
மேலும் இதுபோன்ற சில விதிமுறைகள் இதில் பின்பற்றப்படும். இது வீரர்களின் பாதுகாப்பிறகு முன்னுரிமை அளிக்கும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Serious Injury Replacement rule, BCCI Serious Injury Replacement, BCCI new rule 2025, Rishabh Pant injury rule, CK Nayudu Trophy 2025, Multi-day match injury rule, BCCI domestic cricket changes, Injury substitute in cricket