பாதியில் ரத்தான ஐபிஎல் தொடர் மீண்டும் தொடக்கம்? எந்த நாட்டில் நடைபெறும்? முக்கிய தகவல்
ஐபிஎல் தொடரை இங்கிலாந்தில் நடத்தி முடிக்க பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்தாவிட்டால் ரூ.2500 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என பிசிசிஐ கணித்துள்ளது.
இதனால் தொடரை நடத்தி முடித்தே ஆகவேண்டும் என திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து இங்கிலாந்தில் ஐபிஎல்லை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இதற்காக இங்கிலாந்து டெஸ்ட் தொடரை மாற்றி அமைப்பது குறித்து பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரானது டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக செப்டம்பர் மாதத்தில் நடத்துவதே பிசிசிஐக்கு உள்ள ஒரே வாய்ப்பு. ஆனால் செப்டம்பர் மாதம் 14ம் திகதி வரை இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் இங்கிலாந்திலேயே மீதமுள்ள ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ-ன் கோரிக்கையை ஏற்க வேண்டிய சூழலில்தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உள்ளது.
ஏனெனில், கொரோனா காரணமாக அந்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனை சமாளிக்க வேண்டும் என்றால் ஐபிஎல் போன்ற மிகப்பெரும் தொடர்களை இங்கிலாந்தில் நடத்துவது சிறந்த முடிவாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.