இந்த வீரர்களை எல்லாம் இங்கிலாந்து அனுப்ப முடியாது! டிராவிட் பிடிவாதம்? கோஹ்லியின் கோரிக்கை நிராகரித்த பிசிசிஐ
இந்திய அணியின் தலைவரான கோஹ்லியின் கோரிக்கையை, பிசிசிஐ நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியை தொடர்ந்து, இந்திய அணி, இங்கிலாந்திலே தான் உள்ளது. ஏனெனில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளதால், இதற்காக இந்திய வீரர்கள் அப்படியே அங்கே உள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணி துவக்க வீரர் ஷுப்மன் கில்லுக்கு திடீரென்று காயம் ஏற்பட்டதால், அவர் காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விலகிவிட்டார்.
கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் போன்ற மாற்று வீரர்கள் அங்கு இருப்பதால் இவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அணியோ இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஐந்து போட்டிகள் கொண்ட நெடுந்தொடர் என்பதால் தற்போது இலங்கையில் இருக்கும் தேவ்தட் படிக்கல் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோரை உடனடியாக இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்குமாறு பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளது.
பிரித்வி ஷா, படிக்கல் இருவரும் இலங்கை அணிக்கெதிரான தொடரில் விளையாட அங்கு சென்றிருக்கும் நிலையில், அவர்களை எப்படி அனுப்புவது, அதுமட்டுமின்றி இலங்கை அணிக்கெதிரான தொடரில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் டிராவிட் இந்த விஷயத்தில் அதெல்லாம் முடியாது என்று பிடிவாதமாக இருந்துவிட்டாராம்.
அதுமட்டுமின்றி பிசிசிஐயும் கோஹ்லியின் கோரிக்கையை நிராகத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.