IPL 2025: பிசிசிஐ அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்னென்ன? முழு விவரம்!
எதிர்வரும் ஐபிஎல்லில் தொடருக்கான புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்-2025
இந்தியாவின் பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) 2024 மார்ச் 22 முதல் மே 25 வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு விதிகளை உள்ளடக்கியுள்ளது.
முக்கிய கட்டுப்பாடுகள்
பயிற்சி மற்றும் பயணங்கள்:வீரர்கள் பயிற்சிக்கு வரும் போது அணி பேருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அணிகள் இரண்டு தனித்தனி குழுக்களாக பயிற்சி மேற்கொள்ளலாம்.
அணி பேருந்தில் தனிப்பட்ட மேலாளர்கள் பயணிக்க அனுமதி இல்லை.
உடை மாற்றும் அறை (டிரெஸ்ஸிங் ரூம்) மற்றும் குடும்பத்தினர்: பயிற்சி மற்றும் போட்டிகள் நடைபெறும் நாட்களில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களை தவிர, வீரர்களின் குடும்பத்தினர் டிரஸ்ஸிங் ரூமுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தனி வாகனத்தில் வந்து விருந்தினர் பகுதியில் இருந்து பயிற்சியை பார்க்கலாம்.
ஊழியர்கள் மற்றும் அனுமதி அட்டைகள்: நீட்டிக்கப்பட்ட துணை ஊழியர்களின் (நிபுணர்கள்/நெட் பவுலர்கள்) பட்டியலை பிசிசிஐயிடம் அணிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
பிசிசிஐ ஒப்புதல் அளித்த பிறகு, போட்டி இல்லாத நாட்களில் அவர்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கப்படும்.
அபராதங்கள்: மைதானத்திற்குள் அங்கீகார அட்டை இல்லாமல் வரும் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
போட்டி முடிந்த பிறகு நடக்கும் போஸ்ட் மேட்ச் பிரசண்டேஷன்களில், பயிற்சி ஆடைகளை(ஸ்லீவ்லெஸ் ஜெர்சிகள்-SLEEVELESS JERSEYS) அணியும் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். (முதல் முறை எச்சரிக்கை, இரண்டாவது முறை அணிக்கு அபராதம்)
விளம்பர பலகைகள் மற்றும் மைதான விதிகள்: பவுண்டரிகளுக்கு வெளியே உள்ள விளம்பர பலகைகளை பேட்ஸ்மேன்கள் அடிக்கக்கூடாது.
வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் எல்இடி விளம்பர பலகைகளுக்கு முன்னால் அமரக்கூடாது.
Some New Rules Are In Place For #IPL2025 By The BCCI
— Keshab Chandra (@Analyzer_Keshab) March 4, 2025
(Source:- @cricbuzz ) pic.twitter.com/8EPz59oBHT
மாற்று வீரர்கள், குடிநீர் மற்றும் பிற பொருட்களை எடுத்துச் செல்பவர்கள் அமர்வதற்கு தனி இடங்கள் ஒதுக்கப்படும்.
புதிய கட்டுப்பாடுகள் ஏன்?
சமீபத்தில் நடந்த பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் செயல்திறனை கருத்தில் கொண்டு, வீரர்களின் கவனம் சிதறாமல் விளையாட்டில் முழுமையாக ஈடுபட இந்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஏற்கனவே இந்திய அணிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது ஐபிஎல் அணிகளுக்கும் பொருந்தும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகளின் நோக்கம்
இந்த புதிய விதிமுறைகள் ஐபிஎல் போட்டிகளின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், வீரர்களின் கவனம் சிதறாமல் விளையாட்டில் முழுமையாக ஈடுபடுவதை உறுதி செய்யவும் கொண்டுவரப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |