மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் எங்கு.. எப்போது நடக்கும்? பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் எங்கு எப்போது நடக்கும் என்பது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2021 விவோ ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இல் விவோ இந்தியன் பிரீமியர் லீக் 2021 சீசனின் மீதமுள்ள போட்டிகளை நடத்தி முடிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சனிக்கிழமை அறிவித்தது.
காணொளி காட்சி மூலம் இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக் கூட்டத்தில் (SGM) இந்த முடிவு எடுக்கப்பட்டது, கூட்டத்தில் கலந்துக்கொண்ட உறுப்பினர்கள் ஐபிஎல் மீண்டும் தொடங்க ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.
ஐ.சி.சி டி-20 உலகக் கோப்பை 2021 ஐ நடத்துவதற்கு தகுந்த முடிவு எடுக்க ஐ.சி.சி-யிடமிருந்து கால அவகாசம் பெற பி.சி.சி.ஐ SGM முடிவு செய்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.