அணித்தலைவர் பதவியில் இருந்து விலகும் ரோஹித் சர்மா? அடுத்த கேப்டன் இவரா?
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய அணித்தலைவரை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதவி விலகும் ரோஹித் சர்மா?
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 ஆகிய 3 வடிவ அணிகளுக்கும் அணித்தலைவராக இருந்தவர் ரோஹித் சர்மா.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கோப்பையை வென்ற பின்னர், T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து T20 அணியின் அணித்தலைவராக சூர்யா குமார் யாதவ் நியமிக்கப்பட்டார். அக்சர் படேல் துணை அணித்தலைவராக இருந்தார்.
அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து தொடருக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக சுப்மன் கில் துணை அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.
புதிய அணித்தலைவர் யார்?
இதில் ஷ்ரேயஸ் ஐயருக்கு அணியில் வாய்ப்பளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு ஷ்ரேயஸ் ஐயரை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2027 உலகக்கோப்பை வரை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாட விருப்பம் தெரிவித்திருந்தாலும், அக்டோபரில் நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரே இருவருக்கும் கடைசியாக இருக்கும் என கூறப்படுகிறது.
அவுஸ்திரேலிய தொடருக்கு பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் அணியின் அணித்தலைவராக பொறுப்பேற்று, 2027 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை அந்த பொறுப்பில் தொடர்வார் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |