இந்துக்கள் தாக்கப்பட்ட விவகாரம் - ரூ.9.20 கோடிக்கு வாங்கிய வீரரை நீக்கும் KKR
KKR அணியில் இருந்து முஸ்தஃபிசுர் ரஹ்மானை நீக்க பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
ஷாருக்கானுக்கு எதிர்ப்பு
வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக பதற்றமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. மேலும், அங்கு இந்துக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால், இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற 2026 ஐபிஎல் மினி ஏலத்தில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை(Mustafizur Rahman) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) அணி ரூ.9.20 கோடிக்கு வாங்கியது.

இந்நிலையில், வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியில் சேர்த்ததற்கு KKR அணி உரிமையாளரை ஷாருக்கானை(Shah Rukh Khan) பாஜக, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

மேலும், முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் விளையாடினால், மைதானத்தை சேதப்படுவோம் என சில அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன.
முஸ்தஃபிசுர் ரஹ்மான் நீக்கம்?
இந்நிலையில், அரசியல் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்குமாறு KKR அணிக்கு BCCI செயலாளர் தேவஜித் சைகியா அறிவுறுத்தியுள்ளார்.

அவருக்கு பதிலாக மாற்று வீரரை வழங்க பிசிசிஐ முன்வந்துள்ளது. அதேவேளையில், வீரர் தானாக விலகவில்லை என்பதால், ஐபிஎல் ஒப்பந்த விதிப்படி, ரூ.9.20 கோடியை முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு வழங்க வேண்டி இருக்கும்.

ரூ.9.20 கோடிக்கு வாங்கப்பட்டதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வங்கதேச வீரர் என்ற பெருமையை முஸ்தஃபிசுர் ரஹ்மான் பெற்றார்.
முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு மாற்றாக எந்த வெளிநாட்டு வீரரை கொல்கத்தா அணி வாங்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |