ATM போகுறதுக்கு முன்னாடி கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க!
ஏடிஎம் மெஷினை (ATM) நீங்கள் பயன்படுத்துவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
ஏடிஎம் பயன்பாடு
தற்போதைய காலகட்டத்தில் அனைவரிடமும் வங்கி கணக்கு கட்டாயம் இருக்கும். அவர்கள் வைத்திருக்கும் வங்கி சேமிப்பு கணக்கு ஏடிஎம் கார்டின் மூலம் தங்களுக்கு தேவையான பணத்தை ஏடிஎம்க்கு சென்று எடுத்துக் கொள்வர்.
தற்போது, ஏடிஎம் பயன்பாடு அதிகரித்துள்ளதால் நீண்ட வரிசையில் வங்கிகளில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பது மட்டுமல்லாமல், நிதி அல்லாத பரிவர்த்தனையும் செய்யலாம்.
அதாவது, நம்முடைய வங்கி கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த காரணத்தினால் தான் வாடிக்கையாளர்கள் குறைந்தாலும் ஏடிஎம் கிளைகளை அதிகமாக திறக்கின்றனர்.
ஏடிஎம்மில் செய்யக்கூடிய விஷயங்கள்
*நீங்கள் உங்களது ஏடிஎம் கார்டை கொடுக்கப்பட்டுள்ள ஸ்லாட்டில் செருக வேண்டும். பின்பு, உங்களுக்கான பின் நம்பரை போட்டு எந்தவொரு பரிவர்த்தனையையும் நீங்கள் தேர்ந்தெடுக் கொள்ளலாம்.
* வங்கிகணக்கு இருப்புத் தொகை மற்றும் பரிவர்த்தனை தொடர்பான மினி ஸ்டேட்மெண்ட்டை பார்க்கலாம் * அட்டைக்கு அட்டை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்
* கிரெடிட் கார்டு பேமெண்ட் (விசா) செய்து கொள்ளலாம்
* கணக்குகளுக்கு இடையே நிதி பரிமாற்றம் செய்து கொள்ளலாம்
* ஆயுள் காப்பீட்டு பிரீமியம் செலுத்தலாம்
* காசோலை புத்தக கோரிக்கை விடுக்கலாம்
* ஏடிஎம்களில் டைனமிக் கரன்சி மாற்றம் செய்து கொள்ளலாம்
* பில் செலுத்தலாம்
* மொபைல் வங்கிக்கு பதிவு செய்யலாம்
* ஏடிஎம் பின் நம்பரை மாற்றிக் கொள்ளலாம்.
கவனமுடன் இருக்க வேண்டியவை
உங்களது வங்கிகளில் நிர்ணயம் செய்யப்பட்ட இலவச வரம்பிற்கு மேல் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் விதிக்கும்.
எச்.டி.எஃப்.சி (HDFC) வங்கியில் இலவச வரம்புக்கு மேல் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.8.50 கட்டணம் விதிக்கப்படும். ஐசிஐசிஐ (ICICI) வங்கியில் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் இலவசம்.
மேலும், SBI வாடிக்கையாளர்களுக்கு நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு SBI ஏடிஎம்களில் ரூ.5, மற்ற வங்கி ஏடிஎம்களில் ரூ.8 உட்பட ஜிஎஸ்டி (GST) கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |