காப்பீட்டுத் தொகைக்காக வினோத மோசடியில் ஈடுபட்ட நபர்: காட்டிக் கொடுத்த கமெரா
காப்பீட்டுத் தொகைக்காக சிலர் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பார்கள் போலும். அமெரிக்கர் ஒருவர், காப்பீட்டுத் தொகைக்காக கரடி வேஷம் போட்டுள்ளார்!
காட்டிக் கொடுத்த கமெரா
அமெரிக்காவின் கலிபோர்னியாவில், தங்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரை கரடி ஒன்று சேதப்படுத்திவிட்டதாகக் கூறி காப்பீடு கிளெய்ம் செய்திருந்தார்கள் நான்கு பேர்.
Ruben Tamrazian (26), Ararat Chirkinian (39), Vahe Muradkhanyan (32) மற்றும் Alfiya Zuckerman (39) என்னும் நான்கு பேர்தான் அவர்கள்.
அவர்கள், சுமார் 141,839 டொலர்கள் காப்பீட்டுத் தொகையை கிளெய்ம் செய்திருந்தார்கள்.
அதற்கு ஆதாரமாக அவர்கள் ஒரு வீடியோவை அதிகாரிகளிடம் கொடுக்க, அந்த வீடியோவே அவர்களை சிக்கவைத்துவிட்டது.
ஆம், அந்த வீடியோவை ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள், அது கரடியாக இருக்க வாய்ப்பில்லை என்றும், யாரோ ஒரு ஆள்தான் கரடி வேடம் போட்டு ஏமாற்றியிருக்கக்கூடும் என கூறியுள்ளார்கள்.
அதிகாரிகள் அந்த நான்கு பேரின் வீடுகளையும் சோதனையிட, அங்கு கரடி வேடம் இடுவதற்கான உடைகள் சிக்கின.
விசாரணையில், அவர்களில் ஒருவர்தான் கரடி வேடம் போட்டுள்ளார் என்னும் உண்மை வெளியாக, அவர்கள் நான்கு பேரும் காப்பீட்டு மோசடிக்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |