எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய பிரித்தானிய இளவரசிக்கு இறுகும் சிக்கல்

Royal Family Epstein Files
By Arbin Feb 19, 2026 04:35 AM GMT
Report

எப்ஸ்டீன் கோப்புகளில் பெயர் இடம்பெற்றுள்ள பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ், திருமணத்திற்கு முன்பு நடத்திய தொடர்ச்சியான ஆடம்பர சுற்றுலா தொடர்பில் தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

2015ல் மட்டும் 17 முறை

தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான பீட்ரைஸ், தமது இளம் வயதில் முன்னெடுத்த ஆடம்பர வாழ்க்கைக்கு யார் நிதியுதவி அளித்தார்கள் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய பிரித்தானிய இளவரசிக்கு இறுகும் சிக்கல் | Beatric Went 17 Holidays A Year

ஆண்ட்ரூவின் மூத்த மகளான 37 வயது பீட்ரைஸ் 2022ல் தாம் நிறுவிய BY-EQ நிறுவனத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருவதுடன், இளவரசி பொறுப்பில், அதற்குரிய பணிகளையும் முன்னெடுத்து வருகிறார்.

ஆனால், சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் லட்சக்கணக்கான பவுண்டுகள் செலவில் ஆடம்பரமான விடுமுறைகளை மேற்கொள்வதற்காகப் பெயர் பெற்றவர்.

வெளியான தரவுகளின் அடிப்படையில், 2015ல் மட்டும் 17 முறை வெளிநாட்டுச் சுற்றுலாவிற்கு பீட்ரைஸ் சென்றுள்ளார். அந்த நேரத்தில் அவரது முடிவில்லா சுற்றுலாப்பயணங்கள் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பீட்ரைஸால் இந்தப் பயணங்களை எவ்வாறு முன்னெடுக்க முடிகிறது என்ற கேள்விகள் பெரும்பாலும் பதிலளிக்கப்படாமல் விடப்பட்டன.

இத்தாலி மற்றும் சுவிஸ் ஆல்ப்ஸ் பகுதிகளில் இருந்து பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் வெளியேற உத்தரவு

இத்தாலி மற்றும் சுவிஸ் ஆல்ப்ஸ் பகுதிகளில் இருந்து பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் வெளியேற உத்தரவு

அந்த நேரத்தில் சோனியில் அவரது சம்பளம் வெறும் 19,500 பவுண்டுகள் மட்டுமே என்கிறார் ஒரு அரச குடும்பத்து ஆய்வாளர். சிறப்பு வர்த்தக தூதராக பொறுப்பில் இருந்தபோது ஆண்ட்ரூவின் மோசமான வணிக ஒப்பந்தங்களால் திரட்டப்பட்ட நிதியும்,

அவர்களின் தாயார் ஜெஃப்ரி எப்ஸ்டீனை நிதி ரீதியாக சார்ந்திருந்ததாகக் கூறப்படுவதும், பீட்ரைஸின் ஆடம்பர வாழ்க்கைக்கு முக்கிய நிதி ஆதாரமாக இருந்திருக்கலாம் என்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய பிரித்தானிய இளவரசிக்கு இறுகும் சிக்கல் | Beatric Went 17 Holidays A Year

பீட்ரைஸ் இன்று Edoardo Mapelli Mozzi என்ற கோடீஸ்வரரை திருமணம் செய்துகொண்டு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது ஆடம்பர வாழ்க்கை என்பது கடந்த காலமாக இருந்தாலும், தற்போது அவர் எப்ஸ்டீன் கோப்புகளில் குறிப்பிடப்பட்டதன் பின்னர், மீண்டும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

செலவு 300,000 பவுண்டுகள்

2015ல் எப்ஸ்டீன் மெக்சிகோவில் வைத்து பீட்ரைஸை தனியாக சந்தித்திருக்கலாம் என்றே சமீபத்தில் வெளியான கோப்புகளில் இருந்து தெரிய வருகிறது.

மட்டுமின்றி, ரஷ்ய கோடீஸ்வரரும் முன்னள் Chelsea FC உரிமையாளருமான Roman Abramovich-ன் 1.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஆடம்பர படகில் பலருடன் பீட்ரைஸ் காணப்படும் புகைப்படம் 2015ல் பேசுபொருளானது.

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய பிரித்தானிய இளவரசிக்கு இறுகும் சிக்கல் | Beatric Went 17 Holidays A Year

அப்போது 26 வயதான பீட்ரைஸ் புதிய நிறுவனம் ஒன்றில் சேர்வதாற்காக நியூயார்க் நகருக்கு இடம்பெயர்ந்த நான்கு வாரங்களில் குறித்த புகைப்படம் வெளியானது.

அதனைத் தொடர்ந்து ஹாலிவுட் ஜாம்பவான் டேவிட் கெஃபென் என்பவருக்கு சொந்தமான சொகுசு படகில் பீட்ரைஸ் காணப்படும் புகைப்படம் வெளியானது.

அவருடன், Oprah Winfrey, Gayle King, மற்றும் டிஸ்னி தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகர் ஆகியோர் காணப்பட்டனர். 2015ல் பீட்ரைஸ் முன்னெடுத்த 17 வெளிநாட்டு சுற்றுலாபயணங்களுக்கான மொத்த செலவு 300,000 பவுண்டுகள் வரை இருக்கலாம் என ஒரு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய பிரித்தானிய இளவரசிக்கு இறுகும் சிக்கல் | Beatric Went 17 Holidays A Year

அப்போது அவரது ஆண்டு சம்பளம் வெறும் 20,000 பவுண்டுகள் மட்டுமே. வெளியான தரவுகளின் அடிப்படையில், பீட்ரைஸின் தாயார் ஃபெர்ஜியின் 60,000 டொலர் கடனை திருப்பிச் செலுத்த எப்ஸ்டீன் உதவியதாக தெரிய வந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US