ரூ 20,000 கோடி சொத்து... பக்கிங்ஹாம் அரண்மனையை விட பெரிய வீடு: கர்பா நடனமாடிய பிரபலம்
பரோடாவின் ராணி ராதிகாராஜே கெய்க்வாட் தனது எளிமைக்காகவும், அழகான புடவைகளின் சேகரிப்புக்காகவும் அடிக்கடி பாராட்டப்படுகிறார்.
லட்சுமி விலாஸ் அரண்மனை
மகாராணி என்ற அரச பட்டத்துடன், உலகின் மிகப்பெரிய தனியார் குடியிருப்பில் வாழ்ந்த போதிலும், அவர் ஒரு சாதாரண நபராகவே பொதுமக்களிடையே காணப்படுகிறார்.
அதனாலையே, பாரம்பரிய கர்பா உடை அணிந்து பொதுமக்களுடன் இணைந்து அவர் நடனமாடியுள்ளார். இந்த தோற்றத்தில் ராணியைப் பார்த்ததும், அவருடைய நேர்த்தியும் எளிமையும் மக்களைக் கவர்ந்தது.
அவர் குஜராத்தில் அமைந்துள்ள லட்சுமி விலாஸ் அரண்மனையில் வசிக்கிறார். இந்த அரண்மனை 3,04,92,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது, இது பக்கிங்ஹாம் அரண்மனையை விட நான்கு மடங்கு பெரியது.
புடவைகளில் மட்டுமே பெரும்பாலும் காணப்படும் ராதிகாராஜே, கர்பா இரவுக்காக காக்ரா-சோளி அணிந்திருந்தார். பொதுமக்களில் ஒருவராக நடனமாடி கர்பா இரவை அவர் கொண்டாடியுள்ளார்.
பரோடா அரச குடும்பத்தின் உறுப்பினரான ராதிகாராஜே, ரூ.20,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுக்கு உரிமையாளராவார். குஜராத்தில் உள்ள வான்கனேர் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகராஜே கெய்க்வாட் ஜூலை 19, 1978 அன்று பிறந்தார்.
ராதிகாவின் தந்தை டாக்டர் எம்.கே. ரஞ்சித்சிங் ஜாலா, தனது அரச பட்டத்தை துறந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். ராதிகாராஜே தீவிரமான வாசகர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் இந்திய வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
பல மாநிலங்களில்
2002 ஆம் ஆண்டு மகாராஜா சமர்ஜித்சிங் கெய்க்வாட்டை மணப்பதற்கு முன்பு, ராதிகாராஜே பத்திரிகையாளராகப் பணியாற்றினார். 2012 ஆம் ஆண்டு, லட்சுமி விலாஸ் அரண்மனையில் நடந்த குடும்ப விழாவின் போது, சமர்ஜித் சிங் கெய்க்வாட் பரோடாவின் ஆளுமையாக முடிசூட்டப்பட்டார்.
கெய்க்வாட் குடும்பம் இந்தியாவில் பல சொத்துக்களின் உரிமையாளர்களாகவும், ராஜா ரவி வர்மாவின் மிகவும் மதிப்புமிக்க ஓவியங்களின் தொகுப்பையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
கெய்க்வாட் குடும்பத்தினரிடம் பெருமளவு தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும் குவிந்து காணப்படுகிறது. மேலும் வாரணாசி மற்றும் குஜராத்தில் உள்ள 17 கோயில்களின் அறக்கட்டளைகளையும், இந்தியாவின் பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான எஸ்டேட்களையும் நிர்வகிப்பதாகக் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |