பிரித்தானியாவில் சொந்த நிறுவனம் துவங்க விரும்பும் அழகிய இளம்பெண்... ஆண்களின் தொல்லையால் எடுத்துள்ள முடிவு
பிரித்தானியாவில் சொந்த நிறுவனம் ஒன்றைத் துவங்க விரும்பும் அழகிய இளம்பெண் ஒருவருக்கு, அவர் அழகிய இளம்பெண் என்பதாலேயே பிரச்சினை உருவாகியுள்ளது.
Berkshireஐச் சேர்ந்த மிண்டி சித்து (Mindy Sidhu - 32), My Pretty Marketing என்னும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை உருவாக்கி வருகிறார்.
அதற்கான மிண்டி தனது மொபைல் எண் உட்பட தனது தொடர்பு முகவரியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
அவர் தனது நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்த்தால், ஆண்கள் பலர் அவரது படங்களை லைக் செய்வதும், அவரிடம் வழிவதுமாக, அவரது மொபைல் எண்ணையும், அவரது சமூக ஊடக கணக்குகளையும் தவறாக பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.
ஒருவர், நான் அழகான பெண்களுடன்தான் தொழில் செய்ய விரும்புகிறேன் என்று செய்தி அனுப்ப, மற்றொருவரோ நாம் எப்போது ஒன்றாக வெளியே செல்லப்போகிறோம் என்று கேட்டிருக்கிறார்.
மற்றொருவரோ, தான் மிண்டியுடன் வேலை செய்வதே அவரிடம் ஜொள்ளு விடுவதற்காகத்தான் என்றே வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
எனவே, தான் நிறுவனம் ஒன்றைத் துவக்குவதற்காக, வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காகத்தான் தனது எண்ணைப் பகிர்ந்துகொண்டுள்ளதாகவும், தன்னை தவறான நோக்கத்துடன் அணுகவேண்டாம் என்றும் எவ்வளவோ நாகரீகமாக சொல்லியும் அவரை அவர்கள் விடுவது போல் இல்லை.
ஆகவே, இந்த ஆண்களின் தொந்தரவைத் தாங்க இயலாமல், மிண்டி ஒரு முடிவு எடுத்துள்ளார். அது இனி பெண் வாடிக்கையாளர்களுடன் மட்டுமே பணி செய்வது என்பதுதான்.
இருந்தாலும், எல்லா ஆண்களும் மோசமில்லை என்பதால், சில ஆண் வாடிக்கையாளர்களையும் தேர்வு செய்வதென முடிவு செய்துள்ளார் மினி.
அதாவது, இதற்கு முன் பணி செய்யும்போது பிரச்சினை எதையும் கொடுக்காத ஆண்கள் மற்றும் தம்பதிகளை வாடிக்கையாளர்களாக தேர்வு செய்வது அவரது தற்போதைய முடிவாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021