அபாய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட அழகிய இளம்பெண்: உருவாகியுள்ள சந்தேகம்
வெளிநாடொன்றில் மொடலாக பணியாற்றிவந்த சுவிஸ் குடிமகளான அழகிய இளம்பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டதாக பொலிசார் கருதுகிறார்கள்.
காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட பெண்
கடந்த வியாழக்கிழமை மாலை, தாய்லாந்தில் வாழ்ந்துவந்த Gwendoline Cretton (24) என்னும் அழகிய இளம்பெண்ணை அவளது கணவர் மருத்துவமனைக்குக் கொண்டுவந்துள்ளார்.
உடலில் ஒன்பது இடங்களில் கத்திக் குத்துக் காயங்களுடன் கொடுவரப்பட்ட Gwendolineஐ பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதைக் கண்டறிந்துள்ளார்கள்.
சுவிஸ் குடிமகளான Gwendoline, சர்வதேச மொடலாக வலம்வந்தவராவார். ஆனால், அவர் பணியாற்றிவந்த மொடல் ஏஜன்சி, அவரது பணி ஒப்பந்தம் ஏற்கனவே முடிந்துவிட்டதாக கூறியுள்ளது.
பொலிசாருக்கு உருவாகியுள்ள சந்தேகம்
Gwendolineஐ மருத்துவமனைக்குக் கொண்டுவந்த அவரது கணவர், Gwendoline தன்னைத்தான் கத்தியால் குத்திக்கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததாக பொலிசாரிடம் கூறியுள்ளார்.
அவரது நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருந்துள்ளன.
அவரது வீட்டுக்குச் சென்று சம்பவ இடத்தையும் CCTV கமெராக்களையும் ஆராய்ந்த பொலிசாருக்கு Gwendolineஉடைய கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவர் Gwendolineஐக் கொன்றுவிட்டு, Gwendoline தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக நாடமாடுவதாக நம்பும் பொலிசார், அவரைக் கைது செய்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |