இளவரசர் சார்லசுக்கு திடீரென முத்தமிட்ட அழகிய இளம்பெண்: ஒரு சுவாரஸ்ய தகவல்
சார்லஸ் பிரித்தானிய மன்னராக நாளை மறுநாள் முடிசூட்டப்பட இருக்கும் நிலையில், பொதுமக்கள் பலர் மன்னருடனான தங்கள் அனுபவங்களைக் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.
திடீரென இளவரசர் சார்லசுக்கு முத்தமிட்ட இளம்பெண்
அவ்வகையில், சார்லஸ் இளவரசராக இருக்கும்போது அவருக்கு முத்தமிட்ட அனுபவம் குறித்த தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டுள்ளார் டெப்ரா ஸ்மித் (Debra Smith) என்னும் பெண்.
இளவரசர் சார்லஸ், 1978ஆம் ஆண்டு, தென்கிழக்கு லண்டனிலுள்ள Deptford என்னுமிடத்திற்கு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது இளவரசரைக் காண்பதற்காக காத்திருந்தவர்களில் ஒருவரான டெப்ரா ஸ்மித் என்னும் ஒரு அழகிய இளம்பெண், திடீரென சார்லஸ் கன்னத்தில் நீண்ட முத்தம் ஒன்றைப் பதித்துள்ளார்.
Credit: SUPPLIED
அப்போது எனக்கு வெறும் 18 வயதுதான், ஏன் நான் அப்படி செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை, சின்ன வயதில்லையா, திடீரென்று அப்படி செய்துவிட்டேன் என்கிறார் டெப்ரா.
ஆனாலும், இளவரசர் எப்படி ரியாக்ட் செய்வாரோ என டெப்ரா தயங்கி நிற்க, சார்லஸோ, பரவாயில்லை, கவலைப்படவேண்டாம் என்பதுபோல டெப்ராவின் கையை மென்மையாக பற்றிக்கொண்டு, பின்னர் எதுவும் நடவாததுபோல அமைதியாக அங்கிருந்து நடந்து சென்றாராம்.
மறக்க முடியாத அனுபவம்
ஆனால், பத்திரிகையாளர்கள் சும்மா இருப்பார்களா? டெப்ரா இளவரசர் சார்லசுக்கு முத்தமிடும் புகைப்படம், அடுத்த நாள் எல்லா செய்தித்தாள்களிலும் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியுடன் வெளியானதாம்.
அந்த படங்களை தான் இப்போதும் பொக்கிஷமாக வைத்திருப்பதாக தெரிவிக்கிறார் டெப்ரா.
Credit: SUPPLIED
இப்போதும் தெற்கு லண்டனில் வாழும் டெப்ரா, அந்த புகைப்படத்தை சமீபத்தில் தனது 16 வயது பேரனிடம் காட்ட, அவனால் தன் பாட்டி இளவரசருக்கு முத்தமிட்டார் என்பதை நம்பவே முடியவில்லையாம்.
நான் மன்னருக்கு முத்தமிட்டவள் என்று எந்தப் பெண்ணாலாவது சொல்லமுடியுமா? ஆனால், என்னால் சொல்லமுடியுமே என்கிறார் டெப்ரா!