அழகிப்போட்டியின்போது திடீரென கண்ணீர் விட்டுக் கதறிய அழகி: தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
அழகிப்போட்டிகளில் அழகிகள் விதவிதமான உடைகளில் பூனை நடை பயில்வார்கள், கவர்ச்சி உடையில் உடல் அழகையும், கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது மன அழகையும் வெளிப்படுத்துவார்கள்.
அழகிப்போட்டியில் வென்றால் உலகத்துக்கே தொண்டு செய்வேன் என்று கூறும் அழகிகள் பலர், வெற்றி பெற்ற பிறகு, சினிமாவில் கதாநாயகிகளாகவும் விளம்பர மொடல்களாகவும் ஆகி எக்கச்சக்கமாக சம்பாத்தியம் பார்ப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், அழகிப்போட்டியின்போது, மேடையிலேயே கண்ணீர் சிந்தினார் ஒரு அழகி...
சுயநலம் இல்லாத அழகியின் கண்ணீர்
உண்மையிலேயே அழகிப் போட்டி ஒன்றின்போது தன் நாட்டின் மீதான அக்கறையால் கண்ணீர் சிந்தினார் ஒரு அழகி.
அவருடைய பெயர், ஹான் லே (Han Lay என்னும் Thaw Nandar Aung, 23).
அவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர். பாங்காகில் நடைபெற்ற சர்வதேச அழகிப்போட்டி ஒன்றில் மியான்மர் சார்பில் பங்கேற்ற ஹான் லே, அழகிப்போட்டி நடைபெற்ற மேடையிலேயே கண்ணீர் சிந்திய விடயம் உலகையே பதறவைத்தது.
Rebecca Zandbergen/CBC News
அழகியின் கண்ணீரின் பின்னால் உள்ள பயங்கர விடயம்
மியான்மரில் இராணுவ ஆட்சி நடைபெற்றுவருகிறது. 2021ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசை இராணுவம் கைப்பற்றியது.
அதைத் தொடர்ந்து, நடிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இராணுவ அரசை விமர்சித்த அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் மரண தண்டனை வரை விதிக்கப்பட்டு வருகிறது.
ஆகவேதான், தன் நாட்டு மக்கள் படும் அவதிகளை அழகிப்போட்டி நடக்கும் மேடையிலேயே சொல்லி கண்ணீர் வடித்தார் ஹான் லே. ஆனால் அதற்குப் பிறகு அவரால் மியான்மருக்கு திரும்பிச் செல்ல முடியாது.
தாய்லாந்தும் அவரை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே, கனடாவில் அடைக்கலம் கோரினார் ஹான் லே.
தற்போது கனடாவில் அடைக்கலம் வழங்கப்பட்ட நிலையில், கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹான் லே, தனது நாட்டில் நடக்கும் அராஜகங்களைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தனது கதையை பகிர்ந்துவருகிறார்.
Rebecca Zandbergen/CBC News