முடி உதிர்தலை குறைக்க நடிகை தமன்னா கொடுத்த சூப்பர் டிப்ஸ்! இதோ
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளில் தமன்னாவும் அடங்குவார். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அது வைரலானது.
அதில் அவர் தனது கூந்தல் எவ்வாறு பளபளப்பாகவும், வலிமையாகவும் இருக்க என்ன மாதிரியான பொருட்களை உபயோகிறார் என்று தெரிவித்துள்ளார்.
தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவின் படி, அவர் தனது முடி உதிர்வதில் இருந்து பாதுகாக்க வெங்காயச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை தன் கூந்தலில் பயன்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.
அதுதான் அவரது கூந்தலின் வலிமைக்கும் பளபளப்புக்கும் காரணம். இந்த கலவை சற்று துர்நாற்றத்தை ஏற்படுத்தினாலும், கொடுக்கும் பலன்களோ ஏராளம் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வெங்காயத்திலிருந்து வரும் சல்பர் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான தோல் செல்கள் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
அந்தவகையில் தற்போது நாமும் இந்த வெங்காய சாறு கலவையை எப்படி தயாரிப்பது மற்றும் எப்படி பயன்படுத்துவது குறித்து விரிவாக காண்போம்.
தேவையானவை
- வெங்காயம் -1
- தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
- ஒரு முழு வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அதை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
- பின்னர் அந்த பேஸ்டை வடிகட்டி அதன் சாற்றை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
- அந்த சாறுடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து உங்கள் தலைமுடியில் தடவவும்.
இந்த சாறு எண்ணெய் கலவையை உங்கள் தலைமுடி வேரில் தடவ வேண்டும்.
- ஒரு காட்டன் பேட் உதவியுடன் உங்கள் தலைமுடி முழுவதும் தடவிக்கொள்ளலாம். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால் முடி உதிர்வதை தடுக்கலாம்.
முக்கிய குறிப்பு
வெங்காயச் சாறு குளிர்ச்சி என்பதால், வெங்காய எண்ணெயைப் பயன்படுத்திய 30 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் தலைமுடியை ஷாம்பு கொண்டு அலச வேண்டும். இல்லையெனில் அது உங்கள் மூளையை உறைய வைக்கும்.