சருமத்தில் அதிக குழிகள் இருக்கா? இதை சரி செய்ய ஸ்டிராபெர்ரி சுகர் ஸ்கிரப் போதும்
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஆசை இருக்கும். அதிலும் ஒரு சிலரது சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்.
அதில் ஒரு சிலருக்கு முகத்தில் குழிகள் ஏற்படும். என்னதான் செய்தாலும் இதை நிரந்தரமாக போக்குவது கடினமாக மட்டுமே இருக்கும்.
இதை மறைத்துக்கொள்வதற்கு பலரும் மேக்கப் போட்டுக்கொள்வது வழக்கம். ஆனால் அவ்வாறு செய்து முகத்தை மறைப்பதை இன்றோடு கை விட்டு விடுங்கள்.
அதற்கான தீர்வாக ஒர் வீட்டு வைத்தியம் வந்துவிட்டது. ஆம். உண்மை தான்.
உங்களிடம் ஸ்டிராபெர்ரி இருக்கா? அப்போ உடனே இந்த சுகர் ஸ்கிரப் செய்து முகத்தில் காணப்படும் குழியை நீக்கி விடுங்கள்.
தேவையான பொருட்கள்
-
ஸ்டிராபெர்ரி - 3 அல்லது 4
- சீனி - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை
-
முதலில் ஸ்டிராபெர்ரியை நன்கு கழுவி, நடுவில் இருக்கும் தண்டை அகற்ற வேண்டும்.
- அடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து மசித்துக்கொள்ளவும்.
- அடுத்து சீனி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து எடுத்தால், ஈசியான ஸ்கிரப் ரெடி!
- இதை சருமத்தில் தடவி, வட்ட வடிவில் விரல்களால் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
- 10 நிமிடத்திற்கு பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்தால் குழிகள் அற்த பளிச்சென்ற முகம் கிடைத்து விடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |