சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை விரட்டி சருமத்தை பளிச்சிட செய்ய வேண்டுமா? இதோ சில அழகு குறிப்புக்கள் !
Beauty Tips
Oily skin
By Kishanthini
பொதுவாக நம்மில் பலருக்கு எண்ணெய் வடியும் சருமம் தான் அதிகமாக காணப்படும்.
எண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இதனால் முக அழகு பெரிதும் பாதிப்படைகின்றது. இதனை முன்கூட்டியே போக்க வேண்டுமாயின் ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- 4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
- 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸில், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
- 4 டீஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடல் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.
- 2 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் பால், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 2 நாட்களுக்கு 1 முறை செய்து வந்தால், முகத்தின் பொலிவு மேம்படும்.
- ஆரஞ்சு பழத்தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அதனை சிறிது எடுத்து அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்து கழுவ, முகத்தில் உள்ள கருமை அகலும்.
- 2 டேபிள் ஸ்பூன் தயிரில், 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US