பெண்களே உங்கள் முகத்தில் மீசை முடி, கன்னத்துல இருக்கிற முடியை அகற்ற வேண்டுமா?
Beauty Tips
Home remedies
Hair remove
By Kishanthini
பொதுவாக சில பெண்களுக்கு காது ஓரங்களிலும், கன்னத்திலும், தாடையின் கீழும், உதட்டுக்கு மேல் மீசை போன்றும் அதிகப்படியான முடிகளைப் பார்க்கலாம். அழகை விரும்பும் பெண்களுக்கு இது அதி முக்கிய பிரச்சனையாக இருக்கும்.
முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தினாலும் இவை தற்காலிக தீர்வாகவே இருக்குமே தவிர நிரந்தரமாக இருக்காது.
இந்த முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்த எளிய வழிமுறைகள் உண்டு. அதுவும் நிரந்தரமாகவே போக்கலாம். தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.
- சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றை பிழியவும். இதில் காட்டன் பந்தை துடைத்து முகம் முழுக்க தடவி எடுங்கள். பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். தினமும் ஒரு முறை இதை செய்யுங்கள். எலுமிச்சை சாறு சருமத்தில் எரிச்சலை உண்டாக்கலாம். இந்த குறிப்பை பின்பற்றுவதற்கு முன்பு பரிசோதனை செய்யுங்கள்.
- மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு நீர்த்து பேஸ்ட் ஆக்கி கலக்கவும். முகம் முழுவதும் காட்டன் உருண்டையை கொண்டு துடைக்கவும். குறிப்பாக முடிப்பகுதி இருக்கும் இடங்களில் தடவவும். பிறகு முகத்தை 15 நிமிடங்கள் கழித்து அலசி எடுக்கவும். வாரத்தில் இரண்டு முறை வரை செய்யலாம். இது முடி மங்க செய்து காட்டும்.
- தக்காளி பழமாக எடுத்து துண்டுகளாக்கி நன்றாக மசிக்கவும். இதை எலுமிச்சை சாறுடன் கலக்கவும். முகத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி எடுக்கவும்.
மென்மையாக மசாஜ் செய்யலாம். முடி வளர்ச்சி இருக்கும் இடங்களில் நன்றாக தடவிவிடவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். வாரத்தில் இரண்டு முறை இதை செய்யலாம்.
- பப்பாளி பழத்தை பிசைந்து கொள்ளவும். இதை ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலக்கவும். முகத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும் வாரம் இரண்டு முறை இதை செய்து வரலாம்.
- கடலை மாவின் பசை காய்ந்த உடன் சருமத்தில் ஒட்டிகொள்ளும். அதனால் சருமத்தில் இருக்கும் முடியை சேர்த்து அகற்றலாம்.
- இரண்டு டீஸ்பூன் கொண்டைக்கடலை மாவு எடுத்து மஞ்சள் தூள் மற்றும் தண்ணீரில் கலந்து கெட்டியான பேஸ்ட் ஆக மாற்றவும். பிறகு முகத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பருத்தி உருண்டையுடன் தடவி 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி மென்மையான பருத்தி துணியால் மெதுவாக தேய்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US